நாமக்கல் நகரப் பகுதியில் அனுமார் கோயில் வீதியில் சாக்கடை தோண்டும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, குடிநீர் கழிவுநீருடன் கலந்து வீணாகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.