புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இன்று மதியம் முதல் கருமேகம் சூழ்ந்து திடீரென காற்று அடித்தது. இதனால் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவுக்கு மழை கொட்டியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.