கொல்லிமலை: மண் கடத்திய இரண்டு பேர் கைது

கொல்லிமலை அடிவாரம் கெஜனக்கோம்பை என்ற இடத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் இரவில் தொடர்ந்து கிரவல் மண் வெட்டி லாரியில் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. நேற்று இரவு சுமார் 10 மணியளவில் டிஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்து அங்கு வினோத்குமார், கிரிஷ் குமார் ஆகியோர் மணலை லாரியில் எடுத்துச் சென்றனர். இவர்களை எருமைப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி