செல்லப்பம்பட்டி: மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச் சந்தைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடி வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி