கொல்லிமலையில் இன்று சனிக்கிழமை என்பதால் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு காணப்பட்டனர். கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசில அருவி ஆகிய இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளித்துச் சென்றனர். மேலும் அங்குள்ள கோயிலிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. செம்மேடு பகுதியில் அமைந்துள்ள பழ சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கி சென்றனர்.