நாமக்கல்: அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை நிறைந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இந்த மலைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். 

அதைத் தொடர்ந்து, அரப்பளீஸ்வரர், எட்டுக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 12 முதல் கொல்லிமலையில் நல்ல மழை பெய்தது. இந்த மழையால், இங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும், 13 முதல் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது, மழை குறைந்ததால், ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம்மருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

தொடர்புடைய செய்தி