நாமக்கல்: வெகு விமர்சையாக நடைபெற்ற எருதாட்டம் நிகழ்ச்சி

நாமக்கல் அருகே அமைந்துள்ள கண்ணூர் பட்டி பகுதியில் காணும் பொங்கல் முன்னிட்டு எருதாட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட எருதுகள் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு எருதுகளை பிடித்தனர். இதில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி