கொல்லிமலையில் திடீர் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வரும் காரணத்தால் முள்ளுக்குறிச்சி இருந்து கொல்லிமலை செல்லும் மலைப்பாதையில் வனத்துறை சோதனை சாவடி அருகே திடீரென இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் சரிசெய்து வருகின்றனர். இதனால் முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி