சேந்தமங்கலம் அருகே நைனாமலை ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் தங்கக் கவச அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.