நாமக்கல்-சேலம் சாலையில் நேற்று கணவன்-மனைவி காரில் பயணம் செய்தபோது, புதுச்சத்திரம் அருகே கொம்பேறி மூக்கன் பாம்பு காரின் கண்ணாடியில் இருந்து வெளியே வந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் காரை நிறுத்தி, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.