இராசிபுரம்: சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள ஒருவன்குறிச்சி நடுத்தெருவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ரேணுகாதேவி (21), செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோட்டில் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலைக் கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி