கொல்லிமலையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடமான கொல்லிமலை அமைந்துள்ளது. இன்று (பிப்ரவரி 2 )விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இங்கு உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கோயில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி