நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் கொல்லிமலை பகுதியில் உள்ள அடர் காடு பகுதிக்கு பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் எனவும், ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் எனவும் வனத்துறை எச்சரிக்கை உள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.