எருமப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் வார சந்தையில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர். நேற்று (டிசம்பர் 30) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் வெளி மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஆட்டுச் சந்தையில் ரூ.23 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.