பரமத்தி வேலூர்: திட்டமேடு மயான ஆக்கிரமிப்பு; சுற்றுச்சுவர் அகற்றம்

பரமத்தி வேலூர்: திட்டமேடு. கள்ளிப்பாளையம் கிராமங்களுக்கு இடையே மயானம் தொடர்பாக நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், திட்டமேடு மயானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், வட்டாட்சியர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன், தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜனவரி 3-ஆம் தேதி ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தையில் சுற்றுச்சுவர் அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி