நாமக்கல்: தங்கச் சங்கிலி பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே நதியா என்பவரிடம் 2019-ஆம் ஆண்டு மூன்று போ் வீட்டிற்குள் நுழைந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, பரமத்தி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய தஞ்சை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (42), ராமநாதபுரம் அருண்ராஜ் (25) ஆகிய இருவருக்கும் பரமத்தி நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி