தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. இந்தநிலையில், இன்றும்(மே.23) நாளையும்(மே.24) தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடி, மின்னல் பலத்தக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.