கோவில் திருவிழாவில் பிரச்சனை; பொதுமக்கள் சாலை மறியல்

சேந்தமங்கலத்தில் கடந்த ஒரு வாரமாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இரு வேறு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஒரு சமூகத்திற்கு கோவிலில் முதல் மரியாதை செய்யவில்லை என கூறி இன்று காலை சேந்தமங்கலம் நாமக்கல் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி