கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு

கொல்லிமலை இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகும். இங்கு தினம்தோறும் வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். நேற்று காலை முதல் இன்று (டிசம்பர் 1) காலை வரை தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறையினர் பொதுமக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் குளிப்பதற்கு அனுமதித்து வருகின்றனர். கொல்லிமலை பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி