பள்ளிப்பாளையம் அருகே இளைஞர் சடலமாக மீட்பு

பள்ளிப்பாளையம் அருகே தாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது சமீர் (19) என்பவர் நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனார். அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் அவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. ஆற்றில் தேடியபோது முகமது சமீர் சடலமாக மீட்கப்பட்டார். கொக்கராயன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி