கொல்லிமலை: ஐயப்பன் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைச் சாரல், வரகூர் பகுதியில் அமைய உள்ள, ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கான திருப்பணிகளை, மாநில நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொல்லிமலையின் சாரல் பகுதியில் வரகூர் என்ற இடத்தில் ஓம் குருவனம் அமைந்துள்ளது. 

இங்கு இந்தியாவிலேயே உயரமான குரு தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புதியதாக ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் திருக்கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கோவில் அமைய உள்ள மாதிரிகள் மற்றும் மாதிரி படங்களை அவர்கள் திறந்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி