சேந்தமங்கலம்: குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் சரவணன் வரவேற்றார். சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் தலைமை வகித்து பெண்களுக்கு தொழிற்கல்வி சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மலைவாழ் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சீனிவாசன் பேசினார். நிகழ்ச்சியில் எருமப்பட்டி ஒன்றிய முன்னாள் தலைவர் லோகநாதன், நாமக்கல் தாட்கோ பொது மேலாளர் ராமசாமி, பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் துளசிராமன், தொழிற்கல்வி பயிற்சி பெற்றோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி