நாமக்கல்: போதை ஊசிகள் பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் பகுதியில் போதை மாத்திரை, ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறுக்குபுரம் அருகே ஒரு பிளாட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை மாத்திரை, ஊசிகளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் இளைஞர்கள் ஓடத் தொடங்கினர். இதில் 6 இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி