ஆட்டு சந்தையில் 5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

எருமைப்பட்டி அருகே உள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் ஆட்டு சந்தையில், நேற்று பொட்டி ரெட்டிபட்டி, கஸ்தூரிபட்டி, எருமைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற இந்த ஆட்டு சந்தையில் சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி