நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் இன்று காலை ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் முழுவதும் 178 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.