பால் உற்பத்தியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நவ. 19 முதல் நவ. 30 வரை தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆயிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே. ராமசாமி தலைமை வகித்தார். இதில், பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 45, எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 54 வழங்க வேண்டும், மாட்டுத் தீவனத்தை 50 சதவீதம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் என். ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி