நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகே சிபிஐ சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி. ஆர். செங்கோட்டுவேல் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு நிர்வாகிகள் வி. கோவிந்தசாமி, ஏ. மாணிக்கம், ஆர். அருள்குமார், எம். மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், எம். ஏ. பி. ஜெயபால், ஆர். முருகேசன், ராசிபுரம் நகரச் செயலாளர் எஸ். மணிமாறன், பி. சலீம், இளைஞர் மன்ற மாவட்ட துணை தலைவர் ஜி. ஜெகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.