பிள்ளாநல்லூரில் வள்ளி கும்மி கிராமிய நடன நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், ஐப்பசி மாத திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (நவ. 12) வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அத்தனூர் செங்குந்தர் மகளிர் வள்ளி கும்மி குழுவினர் இந்த கிராமிய நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி