ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்- ஓட்டுநா் பலி 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். 

கர்நாடக மாநிலம், ஹோசகோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை குரியர் சர்வீஸ் கன்டைனர் லாரி பார்சல்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல நாமக்கல் மாவட்டம், புதுச்சேரி பகுதியில் இருந்து கோழி இறைச்சி ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சேலம் நோக்கி சென்றது. இந்நிலையில் இராசிபுரம் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏடிசி டெப்போ அருகே ஆயாக்கோயில் பிரிவு பாதை பகுதியில் சென்றபோது, குரியர் பார்சல் எடுத்துச்சென்ற கன்டைனர் லாரி கட்டுப்பாட்டை இழந்து செண்டர்மீடியனை தாண்டி வலதுபுறம் உள்ள சாலைக்கு சென்று கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற லாரியில் மோதியது. இதில் இரு லாரிகளிலும் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். 

அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற லாரியின் ஓட்டுநர் வேலுசாமி (40) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு லாரி ஓட்டுநர் மோகன், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயத்துடன் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி