நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர்பந்தல்காடு பகுதியில் இன்று (நவ. 06) காலை 9 மணியளவில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து, எதிரே வந்த கல்லூரி பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.