நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளவழி கருப்பனார் கோவிலில் முப்பூஜை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிறப்பம்சமாக, சுமார் 2,500 கிலோ கறி சமைக்கப்பட்டு, 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.