நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.