நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் வைகாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று புதன்கிழமை சக்தி அழைத்தல் மற்றும் தீர்த்த குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், மேளம் தாளங்களுடன் நடனம் ஆடியும் உற்சாகமாக பங்கேற்றனர். தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.