ராசிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு தவெக எம்எல்ஏ மரியாதை

திருப்பூர் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தவெக கட்சியைச் சேர்ந்த கமலி, தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மகா முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்வுகளில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி