நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், அனைத்து கட்சிகள், சேவை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வனை சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி செயல்படுத்தியதற்காக அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நல்வினை செல்வன், “விடுதலைப் போரில் தமிழக செம்மல்கள்” என்ற நூலை நினைவுப் பரிசாக அமைச்சருக்கு வழங்கினார்.