நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து, தேவை அடிப்படையிலான மற்றும் மிகக் குறைந்த செலவிலான தொலைநோக்கி தயாரிக்கும் பணிமனையை தேசிய அறிவியல் தினத்தில் இராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடத்தியது. இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு. செல்வம் தலைமை வகித்தாா். விரிவுரையாளா் சிவபெருமான் வரவேற்று பேசினாா். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ. என். சுரேந்திரன், செயலாளா் ஏ. மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.