நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ செட்டி குமாரசாமி திருக்கோவிலில், மாசி மாதம் 10-ம் நாள் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.