இராசிபுரம்: தொழிலாளர்கள் மோதல் - 10 பேர் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தனியார் நூற்பாலையில், ஒடிஸா மற்றும் பிகார் மாநில தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. பெண் தொழிலாளர் ஒருவருக்கும், பிகார் மாநில தொழிலாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அப்பெண்ணின் நண்பர்கள் தலையிட்டதால் பிரச்னை பெரிதானது. இந்த மோதலில் இரு மாநிலங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி