இராசிபுரம்: தவெக சார்பாக நன்றி தெரிவிப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வி. நகர் மற்றும் முக்கியப் பகுதிகளில் அவர் நேரில் சென்று பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் உடன் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி