நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு துறை சார்ந்த மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மனுக்கள் மீது உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் சங்கர், நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.