நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், நிறுவன தலைவர் ராமசாமி நினைவாக பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கபடி, கோ-கோ, பேட்மிண்டன், வாலிபால், கால்பந்து போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர்.