இராசிபுரம்: ரூ. 1. 34 லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில், தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ராசிபுரத்தில் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று 220 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சம் கிலோ ரூ. 645, குறைந்தபட்சம் ரூ. 590, சராசரியாக ரூ. 611 என 220 கிலோ பட்டுக்கூடு ரூ. 1. 34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி