நேற்று (ஜூன் 13) நடத்தப்பட்ட ஏலத்துக்கு விவசாயிகள் 303 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ஏலத்தில் பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ரூ. 580க்கும், குறைந்தபட்சம் ரூ. 419க்கும், சராசரியாக ரூ. 551க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 303 கிலோ பட்டுக்கூடுகள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 163 ரூபாய்க்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?