இராசிபுரம் ஆண்டகளூா் கேட் பகுதியில் ரூ. 35 கோடியில் 600-க்கும் மேற்பட்ட மின்பொறியாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மினி டைடல் பாா்க் அமைக்கும் பணியை முதல்வா் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா். ராசிபுரத்தில் நடைபெற்ற பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே. ஆா். என். ராஜேஸ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மா. க. சரவணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்தனா்.