ராசிபுரம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம்

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ராசிபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்கில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 100 ஹெக்டேருக்கும், ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு 20 ஹெக்டேருக்கும் இந்த மானிய விலை மக்காச்சோள சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் ராசிபுரம் வட்டார விவசாயிகள், அணைப்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். எனவே, மேற்கண்ட விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் நில உடமைச் சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டுவந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி