இராசிபுரம்: கூட்டு குடிநீர் திட்டம் - எம்பி ஆய்வு

இராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரத்தில் ரூ. 854 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை எம்பி ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் இராசிபுரம் நகராட்சி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர். புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர், மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை புதுச்சத்திரம், வெண்ணந்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சோதனை ஓட்டம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி துவங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி