தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் பங்கேற்று நூற்றாண்டு விழா சுடரை ஏற்றி வைத்து முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களை கெளரவித்தார். விழாவில் அவர் பேசியதாவது: கல்வியின் சிறப்பான முன்னெடுப்புகளுள் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாகவும், பெருமை மிக்கவர்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.