நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு மாரியம்மன் ருத்ர சக்தி ரூபமாக சிவன் பார்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.