நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் ஆர். புதுப்பாளையம் ஜேவிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்க முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைவர் வி. முத்துசாமி தலைமை வகித்த இந்த முகாமில், தீ பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெ. பலகார ராமசாமி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரிமா சங்க நிர்வாகி எம். ராகவன் முன்னிலை வகித்தனர்.