இராசிபுரம்: ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 2.80 லட்சம் பறிப்பு

ராசிபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.80 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றிவரும் முத்துசாமி (40) என்பவர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றார். 

கடையில் இருந்து சிறிது தொலைவு சென்ற முத்துசாமியை இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றது. அதே கடையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவர் பின்தொடர்ந்து வந்த நிலையில் காயமடைந்து கீழே விழுந்திருந்த முத்துசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மங்களபுரம் போலீசார் பணத்தை பறித்துச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி